Kollywood Kisu Kisu - Gossip of the day

காதலன் மேல் ஒரு கண் 
 http://cunardqueens.files.wordpress.com/2009/09/image-film-roll.jpg

ரெண்டெழுத்து குத்துப்பாட்டு நடிகையோடு ஒரு காலத்துல ஆடினவராம் பூரண ஹீரோயின். ரெண்டு பேரும் சேர்ந்து பல படங்கள்ல டான்ஸ் ஆடியிருக்காங்களாம். இப்போ நடிகைய பார்த்தா, பார்க்காத மாதிரி நடந்துக்கிறாராம்... ஹீரோயின் நடந்துக்கிறாராம்... இதை குத்துப்பாட்டு நடிகை வருத்தமா சொல்றாராம்... சொல்றாராம்...

பூ டைரக்டர், அடுத்து ஆக்ஷன் கதையை உருவாக்கி இருக்காராம். இதுக்கு முன்னணி ஹீரோதான் வேணும்னு சொல்றாராம்... இயக்குனரு சொல்றாராம்... அதுக்காக சில நடிகர்களோட மேனஜர்கள்கிட்ட பேசினாராம். 'அந்த இயக்குனரா? ஆக்ஷன் படமா? கால்ஷீட் இல்லேன்னு சொல்லிடுங்க'ன்னு முன்னணி நடிகர்கள் ஒதுங்குறாங்களாம்... ஒதுங்குறாங்களாம்... திரும்ப புதுமுகங்களை வச்சு படம் எடுக்கலாமான்னு இயக்குனரு யோசிக் கிறாராம்... யோச¤க்கிறாராம்...

தாடிக்கார டான்ஸ் மாஸ்டர், புதுப்பட கம்போசிங் விஷயமா புதுவைக்கு போயிருக்காரு... போயிருக்காரு... வெளிநாட்டுக்கு போனா அவர்கூடவே நயனமும் போவாரு. இப்போ புதுவைக்கும் நயனம் வந்திருக்காராம்... வந்திருக்காராம்... 'இதுக்கு அதிக அன்பு காரணம் கிடையாது. காதலன் மேல ஒரு கண் வைக்கணும்னு நடிகை உஷாரா திரியிறாரு'ன்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க... பேசிக்கிறாங்க...   

Comments

Most Recent