Marma Desam - Clash of Titans
ஹாலிவுட்டின் பிரமாண்டமான படைப்பான "க்ளாஷ் ஆப் த டைட்டன்ஸ்' படம், தமிழில் "மர்மதேசம்' என்ற பெயரில் மொழிமாற்றத்துடன் வெளிய...
ஹாலிவுட்டின் பிரமாண்டமான படைப்பான "க்ளாஷ் ஆப் த டைட்டன்ஸ்' படம், தமிழில் "மர்மதேசம்' என்ற பெயரில் மொழிமாற்றத்துடன் வெளியாகிறது.உலகம் முழுவதும் வசூலில் பெரும் சாதனை படைத்துள்ள "அவதார்' படத்தின் நாயகன் சாம் வொர்த்திங்டன் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற "ஹல்க்' படத்தை இயக்கிய லூயிஸ் லெட்டீரியர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.பாதாள உலகை ஆண்டு வரும் வில்லன் தன்னுடன் உள்ள பேய்கள், பயமுறுத்தும் விநோத மிருகங்கள் ஆகியவற்றுடன் உலகை அழிக்க முயற்சிக்கிறான். கடவுளின் அவதாரமாக பூமியில் வாழ்ந்து வரும் நாயகன், தன்னுடன் உள்ள வீரமிக்க சிறு படையுடன் வில்லனை எதிர்த்துப் போராடுவதே கதை.இதை பறக்கும் குதிரை, ராட்சத டிராகன்கள், ராட்சத வெüவால்கள், கற்பனைக்கு எட்டாத களம் போன்றவற்றின் பின்னணியில், கிராஃபிக்ஸ் கலந்து பிரமாண்டமாகக் கூறியிருக்கிறார் இயக்குநர்.ஹாலிவுட்டில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தைத் தமிழகத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ராம.நாராயணன் வெளியிடுகிறார்.3டி மற்றும் 2டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள "மர்மதேசம்' ஏப்ரல் முதல் வாரம் திரையிடப்படுகிறது.
Comments
Post a Comment