Master mind behind Nithyanandha - Ranjitha video scandal

[ranjitha-nithyananda.jpg]

நித்யானந்தரை சிக்க வைத்த சக்தி? கள்ள புன்னகை பூக்கும் தலைவர்

ரஞ்சிதாவும், நித்யானந்தரும் எங்கே? கடவுளை தேடுகிற ஆத்திகனும், கடவுளே இல்லை என்கிற நாத்திகனும் கூட ஆர்வத்தோடு முன் வைக்கிற கேள்வி இது. இருவருமே ஒருசேர ஹரித்துவார் பக்கம் ஓடியிருக்கலாம் என்று கிசுகிசுக்கிறார்கள்!

தமிழ்சினிமா பிரமுகர்கள் பலர் சாமியார் விவகாரத்தில் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இதில் சில முக்கியஸ்தர்கள் ரஞ்சிதாவை காப்பாற்றவும், அவருக்கு ஆறுதல் சொல்லவும் துடிக்கிறார்களாம். ஆனால் அவர்களுக்கே சிக்கவில்லை ரஞ்சிதா.

இந்நிலையில் ராகசுதா, யுவராணி, உள்ளிட்ட வேறு சில நடிகைகளும் கலக்கமடைந்திருக்கிறார்களாம். ருசி கண்ட பூனை பசியில்லாவிட்டாலும் பாய்ந்திருக்குமே? அந்த வீடியோ கிடைக்குமா என்று லென்ஸ் வைத்துத் தேடிக் கொண்டிருக்கிறது மீடியாவும். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நித்யானந்தரை மாட்ட வைத்த சக்தி எது என்று கேள்வியும் எழாமல் இல்லை. நித்யானந்தர் தரப்பில் பிரேமானந்தா என்பவர் மீது குற்றம் சாட்டுக்கிறார்கள். அவரது கைங்கர்யம்தான் இது என்றும், வீடியோவில் இருப்பது அத்தனையும் கிராபிக்ஸ் என்றும் கூறுகிறது சாமியார் தரப்பு. (இவ்வளவு சிறப்பாக கிராபிக்ஸ் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் இங்கு இருந்தால் ரஜினி, அஜீத் கால்ஷீட் இல்லாமலே அவர்களை வைத்து படம் எடுக்கலாம் போலிருக்கிறதே!)

கோடம்பாக்க பெரும்புள்ளிகளில் சிலர் தங்களுக்கு கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். நித்யானந்தத்திற்கும், கர்நாடக அரசியலை கலக்கி வரும் ஒரு பெரும் தலைவருக்கும் நெடுநாட்களாக பகை நிலவி வந்ததாம். அங்கு ஏராளமான நிலங்களை வாங்கி குவித்து வரும் அந்த தலைவர், ஒரே எதிரியாக பாவித்தது சாமியாரைதானாம்.

ஏன்? நில விவகாரத்தில் தலைவருக்கு போட்டியாக நிலத்தை வாங்கி குவித்தாராம் சாமியார். தலைவர் கண் வைத்த இடங்களையெல்லாம் அவரைவிட அதிக விலை கொடுப்பதாக கூறி கிரயம் செய்து கொண்ட சாமியார் மீது தலைவருக்கு செம கோபம். 75 ஏக்கரில் திராட்சை தோட்டமே இருக்கிறதாம் சாமியாருக்கு பெங்களூரில். அதுவும் தலைவருக்கு போக வேண்டிய இடம் என்கிறார்கள் அந்த முக்கிய புள்ளிகள்.

சாமியாரை அடக்க மட்டுமல்ல, ஒரேயடியாக அந்த ஊரைவிட்டே ஓட வைக்க நினைத்தார் தலைவர். சாமியாரின் மெய் காவலர்களை போல சுற்றி வரும் சிலரிடம் நைச்சியமாக பேசியே இந்த வீடியோ படத்தை எடுக்க வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. (இப்போது அவர் நினைத்தது நடந்துவிட்டதல்லவா?)

இதற்கிடையில் நெடுநாட்களாக சாமியாருடன் பழகி வரும் ரஞ்சிதா, முதலில் ஆசிரமம் பக்கம் போனதே, தான் இயக்கப்போகும் டெலி பிலிமுக்கு பைனான்ஸ் கேட்கதானாம். அங்கு பாசிட்டிவான பதில் கிடைக்க அங்கேயே தங்கிவிட்டார் அவர். இன்னும் நெருக்கம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து ஒரு டி.வி சேனலே துவங்குகிற அளவுக்கு திட்டம் போட்டார்களாம். அதற்கு பிள்ளையார் சுழி போடுவதற்குள் விதி செமத்தியாக போட்டு விட்டது இருவரையும்!

பின்குறிப்பு- இன்னொரு சந்தேகத்தையும் கிளப்புகிறார்கள் கோடம்பாக்க புள்ளிகளில் வேறு சிலர். இந்த வீடியோவை எடுக்க சொன்னதே ரஞ்சிதாவாக இருக்கலாம். ஏனென்றால் முழு வீடியோவை பார்க்கும் போது சில காட்சிகள் சிந்திக்க வைக்கிறது. நித்யானந்தர் லைட்டை நிறுத்த முயல, ரஞ்சிதா அவரை தடுக்கிறார். பின்பு லைட் நிறுத்தப்பட்ட பின்பு ஒரு ஃபோகஸ் லைட்டை வேறு பக்கம் திருப்பி வைத்து கொஞ்சம் வெளிச்சம் பரவவும் விடுகிறார். கேமிராவுக்கு சாதகமாக செயல்படுகிறாரோ என்ற எண்ணத்தையே விதைக்கிறது இந்த செயல் என்கிறார்கள்.

Comments

Most Recent