செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்துள்ள படம் ‘முன்தினம் பார்த்தேனே‘. புதுமுகங்கள் சஞ்சய், ஏக்தா, பூஜா, லிஸ்னா நடித்துள்ளனர். 19...
செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்துள்ள படம் ‘முன்தினம் பார்த்தேனே‘. புதுமுகங்கள் சஞ்சய், ஏக்தா, பூஜா, லிஸ்னா நடித்துள்ளனர். 19&ம் தேதி ரிலீசாகும் இப்படம் பற்றி இயக்குனர் மகிழ் திருமேனி கூறியதாவது: ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் ஹீரோவின் வாழ்க்கையில், ஒரு டான்சர், ஒரு பக்கத்து வீட்டு பெண், உடன் பணியாற்றும் பெண் என 3 பேர் கடந்து செல்கிறார்கள்.
அதனால் 3 ஹீரோயின்கள் தேவைப்பட்டார்கள். படத்தில் கிளாமர் உண்டு. ஆனால் அது உறுத்தாத வகையில் இருக்கும். கவர்ச்சிக்காக 3 ஹீரோயின்களை பயன்படுத்தவில்லை. ஐ.டி துறை கதை களம்தானே தவிர கதை அனைவரும் அனுபவிக்கும் சுவாரஸ்யமான, நெகிழ்ச்சியான சம்பவங்களைக் கொண்டது. இவ்வாறு மகிழ் திருமேனி கூறினார்.
Comments
Post a Comment