New homes! Kamal yet to shift, Vairamuthu shited

http://ww1.4tamilmedia.com/images/stories/cinema/kamal-hassan-wallpaper.jpg


கலைஞானி கமலுக்கு ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று அவரது ரசிகர்கள் சூட்டிய செல்லப் பெயர் ரொம்பவே பாப்புலர். அந்தச் செல்லப் பெயர் கமலின் படத்தில் இடம்பெறும் அளவுக்கு பிரபலமானது. சென்னை ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய புறநகர் பகுதியான சோழிங்கநல்லூரில் விரைவில் குடியேற இருக்கிறார் கமல்.
இதற்காக சோழிங்க நல்லூரில் வேகவேகமாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் பிரிவியூ தியேட்டர், நீச்சல் குளம், நடைப்பயிற்சி பூங்கா, உடற்பயிற்சிக்கூடம், ஓவியக்கூடம், போன்றவற்றை அமைத்து வருகிறார் என்று தகவல் வருகிறது. எல்டாம் சாலையில் உள்ள அவரது வீட்டை வழக்கம் போல ராஜ்கமல் அலுவலகமாக பயன்படுத்த இருக்கிறார் என்கிறது கமல் வட்டாரம்.

எதற்கு கமல் சிட்டியை காலி செய்கிறார்? நாய்ஸ் பொல்யூஷன் எனும் ஒலிமாசு கமலை ரொம்பவே பதித்திருக்கிறது. பொதுவாக அமைதியை அதிகம் விரும்பும் கமல் தினசரி கடற்காற்றை சுவாசிக்க முடிவு செய்திருக்கிறார் அவர் மூச்சுப்பயிற்சியின் காதலர் என்று தகவல் கிடைக்கிறது அவரது அலுவலக வட்டாரத்திலிருந்து.

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக குடியிருந்து வந்த கவியரசர் வைரமுத்து கடற்கரையை ஒட்டிய பெசண்ட்நகருக்கு புது வீடு கட்டிக்கொண்டு குடியேறியிருக்கிறார். அவருக்கான வீடு, ஐந்தடுக்கு மாடி வீடாக பிரமாண்டமாக காட்சி தருகிறது. வைரமுத்து தனக்கான அறையை ஐந்தாவது மாடியிலும், தனக்கான நூலகத்தை பூமிக்கு அடியிலும் அமைத்திருக்கிறார் என்கிறார்கள். கவியராசனது கிழக்கு கடற்கரைசாலையின் பிரபல ரிசார்ட்டில், ஸ்பெஷல் இண்டீரியரோடு களிப்பகம் இருப்பதாக அவரது அடிபொடிகள் சொல்லி மகிழ்கிறார்கள்.

Comments

Most Recent