நித்தியானந்த சாமியார் வகையாக மாட்டிக் கொண்டதால் அவரது சீடர்களாக இருந்த திரையுலக நடிகைகள் கலக்கத்தில் இருக்கிறார்கள். யார் யாருக்கு சாமிய...
நித்தியானந்த சாமியார் வகையாக மாட்டிக் கொண்டதால் அவரது சீடர்களாக இருந்த திரையுலக நடிகைகள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
யார் யாருக்கு சாமியாருடன் தொடர்பு இருந்தது என்பதை தயவுதாட்சண்யம் இல்லாமல் போட்டுடைக்க பத்திரிகைகள் முன் வந்திருப்பதுதான் அவர்களின் பெரும் கலக்கத்துக்கு காரணம்.
சமீபத்தில் ஒரு நாளிதழ் நடிகைகளைப் பற்றி அவதூறு எழுதியது. அதை சாக்காக வைத்து ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களை நடிகர்களும், நடிகைகளும் ஆபாசமாக திட்டினர்.
அந்த அவதூறுக்கு சரியான ஆதாரம் இல்லாததால் கம்மென்று இருந்த பத்திரிகையாளர்கள், சாமியார் விவகாரத்தில் யார் யார் மாட்டுகிறார்களோ அவர்களையெல்லாம் படத்துடன் அம்பலப்படுத்த தயாராகிவிட்டனர். இதன் காரணமாக வாரிசு நடிகை உள்பட பலரின் தூக்கம் தொலைந்துள்ளது.
Comments
Post a Comment