'No interest in Hindi films' - Suriya

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw532.jpg

இந்தி சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் ஆசையில்லை என்றார் சூர்யா. ராம்கோபால் வர்மா இயக்கும் படம் ‘ரக்த சரித்ரா’. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் இப்படம் தயாராகிறது. இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற சூர்யா கூறியதாவது:

மும்பை பாந்த்ரா பகுதியில் ஜோதிகாவின் வீடு உள்ளது. மாதந்தோறும் இங்கு வருவது வழக்கம். தமிழ், இந்தியில் தயாராகும் ஷூட்டிங்கிற்காக வருவது இதுவே முதல் முறை. இந்தியில் நடிப்பதால், ஒரு ஆசிரியரை கொண்டு இந்தி கற்றேன். இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் எனது உதவியாளர் மூலம் இந்தி வசனங்களை புரிந்துகொள்கிறேன். சீக்கிரமே இந்தியில் பேசுவேன். இந்தி சினிமாவில் நடிக்கும் ஆசை எனக்கில்லை. ராம்கோபால¢ வர்மா எனக்கு நெருங்கியவர். அவர் கேட்டதால் இதில் நடிக்கிறேன். இந்தி சினிமாவில் எனக்கு தேவை இருப்பதாகவும் நினைக்கவில்லை. பாலிவுட்டில் கலைஞர்கள் வேலை செய்யும் பாணி வேறுபட்டதாக உள்ளது. இப்படத்துக்கு 30 முதல் 40 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்துள்ளேன். இவ்வாறு சூர்யா கூறினார்.

Comments

Most Recent