Political Connection behind Swami Nithyananda Scandal

நித்தியானந்தா விவகாரத்தில் அரசியல் புள்ளி தொடர்பு - விலை போன சீடர்களால் ஒளிப்பதிவு !http://ww1.4tamilmedia.com/images/stories/1news/extra/Samiyar.JPG

ஓரு இரவில் டாப்பிலிருந்து டூப்பாகிப் போன நி‌த்‌‌தியான‌ந்தா ஹ‌ரி‌த்துவாரு‌க்கு த‌ப்‌பியோடியிருப்பதாகத் தமிழகத் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. ‌பிரபல த‌மி‌ழ் நடிகையுட‌ன் உ‌ல்லாசமாக இருந்த காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து, ஆவேசமுற்ற மக்கள் சாமியாரின் ஆச்சிரமங்களை முற்றுகையிட்டுத் தாக்கி வருவதால், சாமியாரின் ஆச்சிரமங்களுக்கு பலத்த காவல் போடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இ‌ந்து ம‌க்க‌ள் க‌ட்‌சி, பெ‌‌ரியா‌ர் ‌திரா‌விட‌ர் கழக‌ம் ம‌ற்று‌ம் இளைஞ‌ர்க‌ள் அமை‌ப்புக‌ள் ‌ ‌நி‌த்‌தியான‌ந்த‌ரை உடனடியாக கைது செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், அவருக்கு மரண த‌ண்டனை கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தி வரு‌வதாக அறியப்படுகிறது. இது இவ்வாறிருக்க நிலைமை மோசமடைந்ததை கண்டு, நித்தியானந்தர் ஹரித்துவாருக்கு தப்பியோடியுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது விடயத்தில் முக்கிய அரசியல் பிரபலம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. அந்த அரசியற் புள்ளிக்கும், நித்தியானந்தருக்கும் ஏற்பட்ட சொத்துப் பிணக்கு ஒன்றில் எழுந்த மோதல் காரணமாக, விலைக்கு வாங்கப்பட்ட நித்தியானந்தரின் சீடர்கள் மூலமாகவே இந்த ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகவும், எதிரணித் தொலைக்காட்சி ஒன்றுக்கே இந்த ஒளிப்பதிவு முதலில் கிடைத்ததாகவும், இந்து மக்களின் ஒட்டுவங்கியைக் கருத்தில் கொண்டு அது ஜாகா வாங்கிவிட, ஆளும் கட்சித் தொலைக்காட்சியும், அதே காரணத்துக்காகப் பின்வாங்கிவிட, சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியதாகவும் அறிவருகிறது.

Comments

Most Recent