Preety Zinda in police station for 5 Hours

http://cinema.dinakaran.com/cinema/gallery/bw108.jpg
சொத்து பிரச்னை தொடர்பான புகாரை பதிவு செய்வதற்காக, போலீஸ் நிலையத்தில் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா 5 மணி நேரம் காத்திருந்தார்.
மும்பையில் ஜோகேஸ்வரி & விக்ரோலி இணைப்பு சாலையில், சினிமா தயாரிப்பாளரும் இயக்குநருமான கமால் அம்ரோகியின் ஸ்டூடியோ உள்ளது. இதில் நடிகை பிரீத்தி ஜிந்தாவும் முதலீடு செய்துள்ளார். இந்த ஸ்டூடியோ யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக கமால் அம்ரோகியின் மகன்கள் இடையே தகராறு இருந்து வருகிறது. இந்த பிரச்னையில் கமால் அம்ரோகியின் மூத்த மகன் சாந்தார் அம்ரோகி பக்கம் பிரீத்தி ஜிந்தா உள்ளார்.
இந்த பிரச்னை தொடர்பாக கார் ரோடு போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க பிரீத்தி ஜிந்தா சென்றுள்ளார். ஆனால், போலீசார் பல காரணங்களை கூறி பிரீத்தியை 10 நாள் அலைய வைத்துள்ளனர். சமீபத்தில் 5 மணி நேரம் போலீஸ் நிலையத்தில் காத்திருந்தும் பிரீத்தியின் புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.

இது குறித்து ‘ட்விட்டர்‘ இணையதளத்தில் பிரீத்தி ஜிந்தா குறிப்பிட்டு, போலீசாரின் அலட்சிய மனப்பான்மையை கண்டித்துள்ளார். “நான் ஒரு சாதாரண பிரஜையாகத்தான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றேன். ஆனால், போலீசார் நான் என்ன கூறுகிறேன் என்பதை கூட கேட்க விரும்பாதது போல நடந்து கொண்டனர். 10 நாட்கள் முயற்சித்தும் என்னால் கார் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்ய முடியவில்லை. சமீபத்தில் 5 மணி நேரம் என்னை காத்திருக்க வைத்த போலீஸ் அதிகாரிகள் என் புகாரை ஏற்க மறுத்து விட்டனர். சினிமா நடிகையான எனக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களிடம் போலீசார் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது’ என்று ட்விட்டர் இணையதளத்தில் பிரீத்தி எழுதியுள்ளார். இதற்கிடையே, இந்த பிரச்னை தொடர்பாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலை சந்தித்து பிரீத்தி முறையிட்டார். புகாரை பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக பாட்டீல் உறுதியளித்தார்.

Comments

Most Recent