Private TV channel office attacked by Chiru party men

 http://thatstamil.oneindia.in/img/2010/03/23-chiru200.jpg
நடிகரும் பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி பற்றி தெலுங்கு தனியார் தொலைக்காட்சி ஒன்று அவதூறாக செய்தி வெளியிட்டதால் கட்சித் தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

அந்த சேனலின் ஹைதராபாத் தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

தனியார் தெலுங்கு டி.வி. சேனல் ஒன்று நேற்று அரசியல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியது.

அதில் பேசிய கட்சி பிரமுகர்கள் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும், இனி சிரஞ்சீவியால் தொடர்ந்து கட்சியை நடத்த முடியாது என்றும் பேசினார்கள்.

இதை கேட்டதும் பிரஜா ராஜ்ஜியம் கட்சி தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்த டி.வி. அலுவலகத்திற்கு முன் திரண்டனர். சிறிது நேரத்தில் டி.வி. அலுவலக கண்ணாடிகள், மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினார்கள்.

சேனல் ஊழியர் சசிகாந்த் என்பவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தடியடிப் பிரயோகத்தைத் தொடங்கினர். உடனே தொண்டர்கள் தப்பி ஓடினர்.

இதுபற்றி ஜூபிளி ஹில்ஸ் போலீசார் 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தப்பி ஓட முயன்றவர்களில் 15 பேரைக் கைது செய்தனர் ஹைதராபாத் போலீசார்.

மேலும் சிலரை தேடி வருகிறார்கள். இது தனக்கு தெரியாமலேயே நடந்துவிட்டதாக சிரஞ்சீவி கருத்து தெரிவித்துள்ளார்.

Comments

Most Recent