Record high salary for actress Asin in Tamil

http://thatstamil.oneindia.in/img/2010/03/19-aisn200.jpg
பாடிகார்டு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடிப்பது தெரிந்த செய்தி. இந்தப் படத்தில் அசினுக்கு வழங்கப்படும் சம்பளம்தான் இப்போது லேட்டஸ்ட் ஹாட்.

இந்தியில் மார்க்கெட் போனாலும், கெத்தை விட்டுக் கொடுக்காத அசின் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாராம்.

வேறு நடிகைகளை தேட தயாரிப்பாளர் முடிவு செய்த போது, விஜய் தலையிட்டு, அசின் கேட்கும் சம்பளத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறிவிட்டதாகத் தெரிகிறது.

சிவகாசி, போக்கிரி என ஹிட் படங்களின் ஜோடி அசின் என்பதால், அந்த ராசி தொடரட்டும் என்று அதே சம்பளத்தை தர தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.

மேலும் 3 இடியட்ஸின் தமிழ் ரீமேக்கிலும் அசின் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் சென்னை வந்திருந்த அசின், பாடிகார்டு ரீமேக் தொடர்பாக அதன் இயக்குநர் மற்றும் ஹீரோவை சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Comments

Most Recent