மும்பை தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி தன்னை மிரட்டிய வழக்கில் நடிகர் சல்மான்கான் சாட்சியம் அளித்தார். மும்பை நிழல் உலக தாதா சோட்டா ஷகீலின் க...
மும்பை தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி தன்னை மிரட்டிய வழக்கில் நடிகர் சல்மான்கான் சாட்சியம் அளித்தார். மும்பை நிழல் உலக தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி அனுஜும் பாஷ்லானி. திரைப்பட தயாரிப்பாளர் நசீம் ரிஸ்வியின் ‘சோரி சோரி சுப்கே சுப்கே’ படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை குறைக்க வேண்டும்; இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சல்மான்கானை இவன் மிரட்டினான்.
மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத் தடுப்பு தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜரான சல்மான்கான், சாட்சி கூண்டில் அரை மணி நேரம் நின்று அரசு வழக்கறிஞரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ‘தயாரிப்பாளர் ரிஸ்வியும், துணை தயாரிப்பாளர் அப்துல் ரஹீம் அல்லா பக்ஷும் என்னை அணுகி, படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் கோரினர். நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன். ஆனால், படத்தை முன்னணி இயக்குனர் இயக்க வேண்டும் என நிபந்தனை விதித்தேன்’ என நீதிபதியிடம் சல்மான்கான் சாட்சியம் அளித்தார். சோட்டா ஷகீலின் கூட்டாளியான பாஷ்லானி தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
Comments
Post a Comment