தனுஷ் நடிக்கும் ‘உத்தமபுத்திரன்’ படத்தின், இந்தி ரீ&மேக்கில் சல்மான் கான் நடிக்கிறார். தெலுங்கில் ராம், ஜெனிலியா நடித்து ஹிட்டான படம்...
தனுஷ் நடிக்கும் ‘உத்தமபுத்திரன்’ படத்தின், இந்தி ரீ&மேக்கில் சல்மான் கான் நடிக்கிறார். தெலுங்கில் ராம், ஜெனிலியா நடித்து ஹிட்டான படம் ‘ரெடி’. இந்தப் படம் தமிழில் ‘உத்தமபுத்திரன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஜெனிலியா ஹீரோயினாக நடிக்கிறார். மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை இயக்குனர் அனீஷ் பாஜ்மீ வாங்கியுள்ளார். அவரே படத்தை இயக்குகிறார். இதில் சல்மான்கான் ஹீரோவாக நடிக்கிறார். “ஹீரோயின் உள்ளிட்ட விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. இந்திக்கு ஏற்ற மாதிரி சில காட்சிகளை மாற்ற உள்ளோம்” என்றார் அனீஷ்.
Comments
Post a Comment