எழுத்தாளர் சுஜாதாவின் 2&ம் ஆண்டு நினைவு தினம் சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. உயிர்மை பதிப்பகம், சுஜாதா அறக்கட்டளை இணைந்து நடத்திய ...
எழுத்தாளர் சுஜாதாவின் 2&ம் ஆண்டு நினைவு தினம் சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. உயிர்மை பதிப்பகம், சுஜாதா அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஷங்கர், வசந்த், பார்த்திபன், ராஜீவ் மேனன், பட அதிபர் வி.சி.சந்திரசேககரன், எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், மதன், ஏ.நடராஜன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இயக்குனர் ஷங்கர் பேசியதாவது:
சுஜாதா பன்முகம் கொண்டவர். அவரது எழுத்து திறமை மட்டுமே வெளியில் தெரிகிறது. மற்ற திறமைகள் மக்களுக்கு தெரியாமல் உள்ளது.
திரைத் துறையில் அவர் சாதனை படைத்தார். வசனங்கள் சிறிதாகவும், பவர்புல்லாகவும் இருக்க வேண்டும் என்று கூறுவார். ‘அந்நியன்’ படத்தில் ரயிலில் சாப்பாடு சரியில்லை, மின்விசிறி சுழலவில்லை என்று அம்பி (விக்ரம்) புகார் சொல்வார். அதைக்கேட்ட டி.டி.ஆர், ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க’ என்பார். உடனே விக்ரம் ‘அட்ஜட்ஸ்ட் பண்ணி பண்ணித்தான் இந்த தேசம் இப்படி இருக்கு’ என்பார். ‘அந்நியன்’ படத்தில் ‘சிறுதப்புக்கும் கொலை செய்வதா?’ என்று ஒருவர் கேட்க,’ தப்பு என்ன பனியன் சைஸா, ஸ்மால், மீடியம், எக்ஸ்டிரா லார்ஜ் என்று பார்ப்பதற்கு’ என்பார். இதேபோல் ‘சிவாஜி’ படத்திலும் வலுவான வசனங்கள் எழுதினார்.
இப்போது உருவாகி வரும் ‘எந்திரன்’ படத்துக்கும் நல்ல வசனம் எழுதி இருக்கிறார். வேலை செய்துவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு வீடு திரும்பும் ரஜினியின் முகத்தில் நீண்ட தாடி வளர்ந்திருக்கும், அதைப்பார்க்கும் அவரது அம்மா, ‘என்னடா லீவுக்கு வந்த ரிஷி மாதிரி இருக்கே’ என்று கேட்பார். ஒரு சீனை ஒரு பக்கத்துக்கு மேல் எழுதக்கூடாது என்பார். எனக்கு ஏதாவது பிரச்னை வந்தால் ஒரு தந்தையிடம் ஆலோசனை கேட்பதுபோல் அவரிடம் கேட்பேன். இவ்வாறு ஷங்கர் பேசினார்.
![[sujatha-shankar-madhan.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHQ0KkBnWlY1YMiULHnoaWr1Ru891GwOi7CS889VwygEyBCt6X4F_JEjVfPoLeE2Y3d9uf4yxojwRLL-oZ8GcmVvpIs31MxBCQOINmusDqI_gDfpUuFaqZ3q5MtVkQB8TdIz6kj5yaj5ZC/s1600/sujatha-shankar-madhan.jpg)
The Uyirmmai Padhippagam and the Sujatha Trust together organized a commemorative function at the New Woodlands Hotel in Chennai on Saturday, 27th February, the second death anniversary of Tamil literature icon Sujatha. The meet was attended by personalities from the field of literature and cinema. Prominent names from the film industry who participated in the meet were directors Shankar, Vasanth and Rajeev Menon, Parthiban, A.Natarajan, Madhan, Indira Parthasarathy, Gnanakoothan, and lyricist Manushyaputhran.
At the function, it was announced that the Sujatha Awards for excellence in literature would be given away every year in memory of the great writer. The awards will be given away in 6 categories, namely Best compilation of short stories, Poetry, Collection of articles, Novel, Best Little Magazine and Best Website. The awards ceremony will be held on Feb. 27 every year. The award will consist of a cash prize of Rs. 10000 and a citation.
Comments
Post a Comment