Shimbu showing more maturity after VTV

  http://mimg.sulekha.com/simbu/Events/Simbu-look/simbu-new-look02.jpg
விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு அநியாயத்துக்கு மெச்சூரிட்டி காட்டுகிறார் சிம்பு. படத்தின் பிரஸ்மீட்டில் அவர் அளித்த பதில்கள் ஒவ்வொன்றிலும் அனுபவத்தின் ஆழம்.

விண்ணைத்தாண்டி வருவாயா தந்த இந்த புது அடையாளத்தை தனது அடுத்தடுத்தப் படங்களில் தக்கவைத்துக் கொள்வதுதான் இப்போது அவரது ஒரே குறிக்கோள்.

கோ படத்திலிருந்து விலகியதால் சிம்பு இப்போதைக்கு ஃப்‌ரீ. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயா‌ரிப்பில் தான் இயக்கி நடிக்கும் வாலிபன் படத்தை தொடங்க முனைப்பு காட்டி வருகிறார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய அவர் கேட்டிருப்பது பி.சி.ஸ்ரீராமை.

வாலிபன் கதை பிடித்ததால் ஒளிப்பதிவு செய்ய பி.சி. ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. யாவரும் நலம் படத்துக்குப் பிறகு பி.சி. வேறு எந்த தமிழ்ப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent