'Signed in 9 films' - Sneha



என்னால் குடும்பபாங்கான வேடங்களில்தான் நடிக்கமுடியும் என்று முத்திரை குத்தி வைத்தனர். அந்த இமேஜில் இருந்து விடுபட பெருமுயற்சி எடுத்தேன். “பவானி ஐ.பி.எஸ்.” படம் மூலம் அதற்கு வழி திறந்துள்ளது. விஜயசாந்தி நடித்த அதிரடி போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து குடும்பபாங்கான இமேஜில் இருந்து விடுபட்டு விட்டேன்.

கடந்த ஆண்டு என்னிடம் அதிக படங்கள் இல்லை. ஆனால் இந்த ஆண்டு 9 படங்கள் கைவசம் உள்ளன. இதில் 7 படங்கள் தமிழ் படங்கள். 2 மலையாள படத்தில் நடிக்கிறேன். “பவானி ஐ.பி.எஸ்” படம் தமிழ், தெலுங்கில் வருகிறது.
சரத்குமார் ஜோடியாக “விடியல்” என்ற படத்தில் நடிக்கிறேன். அவருடன் நடிக்கும் முதல் படம் இது. ஆறு அல்லது ஏழு படங்கள் இந்த ஆண்டிலேயே ரிலீசாகும். இனிமேல் நான் வெற்றியைதான் பார்ப்பேன் என்றார்.

Comments

Most Recent