'Singam' first in race against 'Sura'

http://www.mirchigossips.com/wp-content/uploads/2009/09/singam-movie-stills-04.jpg
ரிலீஸ் போட்டியில் சூர்யாவின் ‘சிங்கம்’ முந்துகிறது. விஜய்யின் ‘சுறா’ பின்தங்குகிறது.

சுறாவை சங்கில் முருகன் தயாரித்து வருகிறார். படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை வாங்கியிருப்பது சன் பிக்சர்ஸ். படப்பிடிப்பை சீக்கிரம் முடித்து படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட வேண்டும் என்பது சன் பிக்சர்ஸின் திட்டம். அன்றுதான் சூர்யா நடிப்பில் ஹரி இயக்கியிருக்கும் ‘சிங்கம்’ வெளியாகிறது.

இந்த அவசரம் காரணமாக அமெரிக்காவில் எடுக்கத் திட்டமிட்டிருந்த பாடல் காட்சியொன்றை நியூசிலாந்துக்கு மாற்றியிருக்கிறது ‘சுறா’ யூனிட். தற்போது அந்தப் பாடல் காட்சி நியூசிலாந்தில் படமாக்கப்பட்டு வருகிறது. மார்ச் 26ஆம் தேதி ‘சுறா’வின் ஆடியோ வெளியிடப்படுகிறது.

என்னதான் வேகமாக படப்பிடிப்பு நடத்தினாலும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜரூராக நடந்தாலும் ஏப்ரல் 14ஆம் தேதி படத்தை வெளியிடுவது கஷ்டம் என்கிறார்கள் ‘சுறா’ யூனிட்டில். இதனைப் புரிந்து கொண்ட சன் பிக்சர்ஸ் பட வெளியீட்டை ஏப்ரல் இறுதிக்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது. ஆக, ‘சுறா’வை முந்திக் கொண்டு ஏப்ரல் 14இல் ‘சிங்கம்’ திரைக்கு வருகிறது.

Comments

Most Recent