சீரியல்களில் பிஸியாக இருக்கும் சன் டி.வி. வானிலை அறிவிப்பாளினி மோனிகாவுக்கு இப்போது சினிமா வாய்ப்பும் அடித்திருக்கிறது. ஜீவா நடிக்கும் ...
சீரியல்களில் பிஸியாக இருக்கும் சன் டி.வி. வானிலை அறிவிப்பாளினி மோனிகாவுக்கு இப்போது சினிமா வாய்ப்பும் அடித்திருக்கிறது. ஜீவா நடிக்கும் 'ரௌத்திரம்' படத்தில் ஜீவாவுக்கு அக்கா இவர்தானாம். இப்படத்துக்குப் பின் தொடர்ந்து சினிமாக்களில் நடிக்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறாராம். 'திருமணத்துக்குப் பின் சினிமாவுக்கு வரலாம் என்றிருந்தேன் அதே போல் வந்துவிட்டேன்' என்கிறார் மோனிகா.செல்லக் குரலுக்கான தேடல், சிறந்த மணமகனுக்கான தேடல் உள்ளிட்ட தேடல்களை தொடர்ந்து சிறந்த அம்மாவுக்கான தேடலையும் தொடங்கப் போகிறது விஜய் டி.வி. குழந்தைகள் வளர்ப்பு முதல் பல சுற்றுக்களை வைத்து தமிழகத்தின் சிறந்த அம்மாவை தேடப் போகும் இந்த நிகழ்ச்சியை ஏப்ரல் முதல் வாரத்தில் களம் இறக்கப் போகிறார்களாம்.வரும் வாரம் முதல், வாரந்தோறும் தனது ஒளிபரப்பைத் தொடங்க போகிறது 'ஹரியுடன் நான்'. இதன் முதற்கட்ட தேர்வு சென்னையில் பிரமாண்ட முறையில் அரங்கேறி இருக்கிறது. முதற்கட்ட குரல் தேர்வுக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 2000 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஜெயா டி.வி. நடத்திய வேறு எந்த இசை நிகழ்ச்சிக்கும் இவ்வளவு பேர் வந்ததில்லையாம். இந்த குரல் தேர்வுதான் முதல் நாளை அலங்கரிக்கிறது.தமிழில் நரேனின் அக்காவாக ஒரு படத்திலும், மலையாளத்தில் இரு படங்களிலும் நடித்து வருகிறார் மீனா. கையில் இருக்கும் சினிமாக்கள் முடிந்தவுடன் மீண்டும் சீரியல்களில் நடிக்கும் முடிவை எடுத்திருப்பதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சீரியலை நடிகை ஒருவரின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. திருமணத்துக்கு முன் நடித்த சீரியலின் பெயர் 'லட்சுமி'.உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான விளம்பரங்களுக்கு இப்போதே நடிகைகளை இழுக்கும் முயற்சியில் இறங்கி விட்டன நிறுவனங்கள். இதற்காக பல குளிர்பான நிறுவனங்கள் நடிகைகளிடம் பேச்சைத் தொடங்கி இருக்கின்றன. ப்ரீத்தி ஜிந்தா, அசின், கரினா கபூர் உள்ளிட்ட சிலர் சில கோடிகளுக்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்களாம்.
Comments
Post a Comment