மோகன்லால், அமிதாப்பச்சன் இணைந்து நடிக்கும் கந்தகார் விரைவில் தொடங்குகிறது. படப்பிடிப்புக்கான நாள் நெருங்கும் நேரத்தில் திடீர் சிக்கல். கந...
மோகன்லால், அமிதாப்பச்சன் இணைந்து நடிக்கும் கந்தகார் விரைவில் தொடங்குகிறது. படப்பிடிப்புக்கான நாள் நெருங்கும் நேரத்தில் திடீர் சிக்கல். கந்தகாரில் கமாண்டோவாக நடிக்க சம்மதம் தெரிவித்திருந்த சூர்யா கடைசி நிமிடத்தில் கைவிரித்துள்ளார். கந்தகாருக்கு கால்ஷீட் இல்லையாம்.
சூர்யா ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் நடிக்கும் ரக்தசரித்ரா படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் இப்படம் தயாராகிறது. சூர்யா நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு, இந்தி திரைப்படம் இது. சூர்யாவின் சின்சியாரிட்டி 200 மடங்காக எகிறியிருக்கிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து முருகதாஸின் படத்தில் சூர்யா நடிக்கிறார். ஏறக்குறைய இந்த வருடத்தின் கால்ஷீட் டைரி ஹவுஸ்ஃபுல். கந்தகாருக்கு கிள்ளிக் கொடுக்கக்கூட இல்லையாம் கால்ஷீட்.
தனது இந்த நெருக்கடியை மோகன்லாலுக்கு விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் சூர்யா. காரணம் கந்தகாரை இயக்குவது மேஜர் ரவி என்றாலும், தயாரிப்பது ஹீரோவாக நடிக்கும் மோகன்லால்.
சூர்யாவுக்குப் பதில் துடிப்பான இளம் நடிகர் ஒருவரைத் தேடி வருகிறார் லால்.
Comments
Post a Comment