Trichy Siva in Sasikumar's film

 http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-3/eligible-bachelor/images/sasi-kumar.jpg
சசிகுமார் இயக்கும் பெய‌ரிடப்படாத படத்தில் ஏ.எல்.அழகப்பனுடன் வைபவ், அபிநயா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து வருகின்றனர். விக்ரம் படத்தை தயா‌ரிக்கிறார். இந்தப் படத்தில் சசிகுமார் எந்த வேடமும் ஏற்கவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் படம் தயாராகவுள்ளது. இதில் பிரபல திமுக ரா‌ஜ்யசபா எம்பி நடிக்கவுள்ளார். அவர் திருச்சி சிவா.

சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு அண்ணன் கதாபாத்திரம் ஒன்று உள்ளது. சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் திருச்சி சிவாவைப் பார்த்த சசிகுமார் அசந்து போயிருக்கிறார். தாடியுடன் பார்க்க சசிகுமா‌ரின் அண்ணன் போலவே இருந்திருக்கிறார் திருச்சி சிவா. உடனடியாக அவ‌ரிடம் பேசி தனது படத்தில் அண்ணனாக நடிக்க சம்மதம் வாங்கியிருக்கிறார்.

படத்தில் சூ‌ரியனை புகழும் வசனம் இருக்குமா?

Comments

Most Recent