Vadivelu to do Nithyanandha role


Vadivelu in Nithyanantha`s role
நடிகை ரஞ்சிதா - சாமியார் நித்யானந்தா படுக்கையறையில் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை சினிமாவாக எடுக்க சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியானது. அதன் பிறகு நித்யானந்தாவே சினிமா தயாரிக்கப் போவதாகவும், அதில் நித்யானந்தரின் அருளுரை இடம்பெறும் என்றும் ஆசிரம வட்டார தகவல்கள் தெரிவித்தன. இப்போது நித்யானந்தா வேடத்தில் காமெடி நடிகர் வடிவேலு நடிக்கப்போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

புதிய இயக்குனர் ஆதம்பாவா இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படம் உலகம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தில் வடிவேலு நாயகனாக நடிக்கிறார். கிட்டத்தட்ட 25 கெட்அப்களில் தோன்றவிருக்கும் வடிவேலு நித்யானந்தா வேடத்திலும் கலக்கப் போகிறாராம். படத்தி்ல 10 ‌ஹீரோயின்கள் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளனர். ஏற்கனவே பல படங்களில் வடிவேலு சாமியார் கெட்-அப்பில் நடித்திருந்தாலும், இப்போது நித்யானந்தரின் லீலைகள் வெளியாகியிருக்கும் சூழ்நிலையில் நித்யானந்தா வேடத்தில் நடிக்கப்போவதால் இந்த கேரக்டர் பரபரப்பாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Most Recent