Vikram Bhatt's Shaapit in Tamil

http://downloadming.com/uploads/shaapit2-209x300.jpg
விக்ரம் பட்டின் ஏஎஸ்ஏ புரொட‌‌க்சன் அண்ட் என்டர்பிரைசஸ் தயா‌ரித்திருக்கும் படம் ஷாபிட். அட்வென்சர் த்‌ரில்லரான இந்தப் படம் இந்தியில் வெளியாகும் அதே நாள் தமிழிலும் வெளியாகிறது.

விக்ரம் பட்டின் ஏஎஸ்ஏ நிறுவனம்தான் முத்திரை படத்தை இங்குள்ள நிறுவனத்துடன் இணைந்து தயா‌ரித்தது. அந்த வகையில் தமிழ்‌த் திரைத்துறை விக்ரம் பட்டுக்கு புதிதல்ல. இவரது நிறுவனம் தயா‌ரிக்கும் த்‌ரில்லர் படங்கள் பெ‌ரிய அளவில் வசூலை குவித்துள்ளன. உதாரணத்துக்கு மல்லிகா ஷெராவத்தை பெ‌ரிய ஆளாக்கிய மர்டர்.

ஷாபிட் படத்தை தயா‌ரித்திருப்பதுடன் விக்ரம் பட்டே இயக்கவும் செய்துள்ளார். ஆதித்ய நாராயண், ஸ்வேதா அகர்வால் நடித்துள்ளனர்.

எந்த மொழி ரசிகனையும் கவரும் அட்வென்சர் த்‌ரில்லர் என்பதால் படத்தை தமிழிலும் வெளியிடுகிறார்கள்.

Comments

Most Recent