Wedding bells for Dayanidhi Alagiri

http://thatstamil.oneindia.in/img/2010/03/12-dayanithi-azhagiri200.jpg

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி. திரைப்படத் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். வாரணம் ஆயிரம், தமிழ்ப்படம், தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா ஆகியவற்றை வாங்கி வெளியிட்டு வெற்றி பெற்றவர்.

தற்போது தூங்காநகரம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறார்.

அவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணப்பெண் உறவுக்காரர். மார்ச் 18ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

பிற விவரங்களை இன்னும் அழகிரி குடும்பத்தினர் வெளியிடவில்லை.

Comments

Most Recent