பலே பாண்டியாவுக்காக 20 பேர் பாடிய பாடல்

 http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-834.jpg
சித்தார்த் சந்திரசேகர் இயக்கும் படம் ‘பலே பாண்டியா’. விஷ்ணு, பியா ஜோடியாக நடிக்கின்றனர். தேவன் இசை அமைக்கிறார். படம் பற்றி நிருபர்களிடம் சித்தார்த் கூறியதாவது: வாலிபன் ஒருவன் தனது வாழ்க்கையை எதிர்மறையாக சிந்திக்கும்போது எல்லாமே எதிர்மறையாக நடக்கிறது. நேர்மையாக சிந்திக்கும்போது அவன் உயர்ந்த இடத்துக்கு செல்கிறான் என்ற கருவை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. இப்படத்துக்காக வாலி எழுதிய ‘ஹேப்பி...’ என்ற பாடலை 20 பாடகர்கள் பாடியுள்ளனர். தாமரை எழுதியுள்ள ‘கண்களே கமாலயம்’ என்ற பாடல் அந்தாதி வகை பாடலாக உருவாகி உள்ளது. விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது. இவ்வாறு சித்தார்த் கூறினார். முன்னதாக இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம நாராயணன், கவிஞர் வாலி, வி.சி.குகநாதன், ஜி.சேகரன், ஜெயம் ராஜா, ஜனநாதன், சிம்புதேவன், ஏ.ஆர்.முருகதாஸ், தாமரை, பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments

Most Recent