Actress Kushboo denies joining Congress party | எந்த கட்சியில் சேருவது: முடிவு செய்யவில்லை-குஷ்பு

http://thatstamil.oneindia.in/img/2010/04/30-kushbooo200.jpg
எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் எந்தக் கட்சியில் சேருவது என்பதை முடிவு செய்யவில்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

அவர் காங்கிரசில் சேர முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால், லண்டனில் இருந்து அவர் அளித்துள்ள ஒரு பேடடியில், நான் எப்போதுமே காங்கிரஸ் கொள்கைகளை பின்பற்றுபவள். இந்திரா காந்தி மீதும், ராஜீவ் காந்தி மீதும் எனக்கு அதிக பற்று உண்டு என்று தான் பதில் அளித்தேன். காங்கிரஸ் கட்சியில் சேருவேன் என்று நான் சொல்லவில்லை.

எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. ஆனால், அரசியலில் இறங்குவது குறித்து இனனும் உறுதியான முடிவெடுக்கவில்லை. எந்த கட்சியில் சேருவேன் என்பதையும் முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.

குஷ்பு குழப்புவதைப் பார்த்தால் அவருக்கு அரசியலில் நிச்சயம் நல்ல எதிர்காலம் இருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

Comments

Most Recent