Ajith's birthday request to fans | வேண்டாம் ஆடம்பர பிறந்த நாள் விழா!-அஜீத்

Ajith Kumar, who would be racing hard in Formula 2 at Spain on May 1, has urged his fans not to celebrate his birthday in a grand manner.
In a statement from Spain, Ajith said, "I thank my ardent fans who had been with me during my success, defeats and travails. They have been my source of inspiration and strength. Since I would be racing in Spain on May 1 in Formula 2 championship, I request my fans not to take the trouble of coming to my house in Chennai or organise grand celebrations".
He added: "If my fans can celebrate in such a way that would benefit the needy and down-trodden, it would be the best birthday gift to me from them."

எனது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் அஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்பெயின் நாட்டிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

என் மீது அன்பும், அபிமானமும் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது பார்முலா 2 சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்காக நான் ஸ்பெயின் வந்துள்ளேன். எனவே மே 1 ந் தேதி என்னுடைய பிறந்த நாளின்போது நான் சென்னையில் இருக்க வாய்ப்பில்லை.

ஆகையால் ரசிகர்கள் பிறந்த நாளின்போது என்னுடைய இல்லத்துக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஆடம்பரமான முறையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ரசிகர்கள் நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டால் மகிழ்ச்சியடைவேன்" என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே தலைமை மன்றத்தின் அனுமதி இல்லாமல் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் அஜீத் ரசிகர்கள் ஈடுபடக் கூடாது என்று அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.

Comments

Most Recent