Asin is the Brand Ambassador for IPL Kochi team

http://thatstamil.oneindia.in/img/2010/04/02-asin2-200.jpg
ஐபிஎல் லிஸ்டில் புதிதாக சேர்ந்துள்ள கொச்சி அணிக்கு விளம்பரத் தூதராக (பிராண்ட் அம்பாஸிடர்) ஒப்பந்தமாகியுள்ளார் கேரளாவைச் சேர்ந்தவரான நடிகை அசின்.

சினிமாவும் ஐபிஎல் போட்டிகளும் பின்னிப் பிணைந்துவிட்டன. ஐபிஎல்லின் எல்லா அணிகளின் பின்னணியிலுமே கிட்டத்தட்ட யாராவது திரை நட்சத்திரம் உள்ளார்.

கொல்கத்தா அணிக்கு ஷாரூக் - ஜூஹி சாவ்லா, பஞ்சாப் அணிக்கு ப்ரீத்தி ஜிந்தா, ராஜஸ்தான் அணிக்கு ஷில்பா ஷெட்டி ஆகியோர் உரிமையாளர்களாக உள்ளனர்.

இன்னும் சில அணிகளுக்கு நடிகர் நடிகைகள் விளம்பரத் தூதர்களாக உள்ளனர். கத்ரீனா கைப், அமீர்கான், அக்ஷய்குமார், தீபிகா படுகோன், த்ரிஷா போன்றவர்கள் இந்தப் பட்டியலில் வருகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை திரிஷா ஸ்டேடியத்துக்கு வந்து உற்சாகப்படுத்தியது நினைவிருக்கும்.

அந்த அணியின் விளம்பர நிகழ்ச்சிக்காக விஜய்யும், நயனதாராவும் கூட வந்து போனார்கள்.

இந்த விளம்பரத் தூதர் வரிசையில் புதிதாக இடம்பெறவிருப்பவர் அசின்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் புதிய அணியான கொச்சி பங்கேற்கிறது. இந்த அணியை ரெண்டஸ்வஸ் நிறுவனம் ரூ.1500 கோடிக்கு மேல் விலை கொடுத்து வாங்கியது நினைவிருக்கலாம். ஸ்ரீசாந்த் தலைமையில் இந்த அணி களமிறங்கும் எனத் தெரிகிறது.

கொச்சி அணியை பிரபலப்படுத்த தூதுவராக (பிராண்ட் அம்பாசிடர்) அசின் நியமிக்கப்படுகிறார். விரைவில் அதிகாரப்பூர்வ விளம்பரத்தில் வாயெல்லாம் பல்லாக அசின் தோன்றுவதைப் பார்ப்பீர்கள்!

Comments

Most Recent