Asin to play against John Abraham

http://thatstamil.oneindia.in/img/2010/04/07-asin2000.jpg
தமிழில் இப்போது விஜய்க்கு ஜோடியாக காவல்காரன் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ள அசின், அடுத்து நடிப்பது இந்திப் படத்தில்.

இது தமிழில் சக்கை போடு போட்ட காக்க காக்க படத்தின் இந்தி ரீமேக். விபுல்ஷா தயாரிக்கும் இந்தப் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் ஜெனிலியா.

ஆனால் ஜான் ஆபிரகாம் கடைசி நேரத்தில் அசின்தான் இதில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என அடம்பிடிக்க, மீண்டும் ஒரு சான்ஸ் அடித்தது அசினுக்கு.

இந்தப் படத்தை காக்க காக்க இயக்கிய கவுதம் மேனனே இயக்குவார் என்று கூறப்பட்டது. இப்போது அதில் மாற்றமிருக்கலாம் என்கிறார்கள்.

ஏற்கெனவே சல்மான்கான் படத்திலும் கடைசி நேரத்தில் தீபிகா படுகோன் நீக்கப்பட்டு அசின் ஒப்பந்தமானார். இப்போது ஜான் ஆபிரகாமும் அதே பாணியில் அசினுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

விஜய் படம் முடிந்ததும் மீண்டும் முழு நேரமும் மும்பையிலேயே இருந்து இந்த இரு படங்களிலும் நடிப்பாராம் அசின்.

Comments

Most Recent