கைவிட்ட கார்த்தி, கைகொடு்க்கும் சிம்பு

http://ww1.4tamilmedia.com/images/stories/cinema/simbuvskarthi.jpg
பொல்லாதவன் படத்தின் மூலம் தன்னை தரமான இயக்குனராக பதிவு செய்தவர் வெற்றிமாறன்.

இயக்குனர் பாலுமகேந்திராவிடம் தொடர்ந்து பத்தாண்டு காலம் உதவி இயக்குனராக இருந்து சினிமா கற்றுக்கொண்ட ஒரே உதவியாளர்.

அப்படிப்பட்ட வெற்றிமாறன் தமிழ்மண்ணின் அடையாளங்களோடு தனது படைப்புக்களை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்.

பொல்லாதவனுக்கு பிறகு, மீண்டும் தனுஷை இயக்கிய வெற்றிமாறனின் ஆடுகளம் தமிழ்சினிமாவில் நல்ல சினிமாவுக்கான வரிசையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆடுகளம் படத்துக்கு பிறகு வடசென்னை வாழ்வை மையப்படுத்தி ‘வடசென்னை’ என்ற படத்தை தொடங்க இருந்தார்.

மீனவனாக இருந்து, ஒரு மாநிலத்தின் காவல்துறைத் தலைவரே உதவிக்காக நாடும் ஃபவர்ஃபுல் குப்பத்து காட்ஃபாதராக மாறிய ஒருவனைப்பற்றி கதை.

இதில் தமிழகத்தின் முக்கிய வந்தேறிகளான மார்வாடிகள், வடசென்னை தாதாக்களை எந்த அளவு பணத்தால் அடித்து, வட்டிக்கடையும், பொட்டலம் பிசினஸும் (கஞ்சா, சுகர், போதைலேகியம், போதை ஐஸ்கிரிம், போதை குல்பி ஐஸ்) பண்ணுகிறார்கள் என்பதை திரைகதையில் தோலுரித்து காட்டியிருந்தாரம்.

முதலில் இந்தக்கதையில் கார்த்தி நடித்தால் நன்றாக இருக்குமென்று முடிவு செய்து, வடசென்னையின் கதையை கார்த்தி, அவரது தந்தை சிவகுமார், அண்ணன் சூரியா, அவர்களது வீட்டு நாய்குட்டி உள்ளிட்ட அனைவரிடமும் சொல்லி ஒகே வாங்கியிருக்கிறார்.

மே மாதம் 10 ஆம் தேதி சூட்டிங் போய்விடுவது என்று முடிவு செய்து திட்டமிட்ட நேரத்தில், என்னால் வடசென்னை படத்தில் இப்போதைக்கு நடிக்கமுடியாது, எனது சொந்த நிறுவனத்தின் ரீமேக்கில் நடிக்கிறேன் என்பதை ஒரு எஸ்.எம்எஸ் மூலம் வெற்றிமாறனுக்கு சொன்னாராம் பையா ஹீரோ கார்த்தி.

நல்ல படைப்பாளி எத்தனைபெரிய இழப்புக்கும் கலங்கமாட்டான் என்பதால் ஒரு புதுமுகத்தை வைத்து வடசென்னையை தொடங்குவது என்று முடிவெடுத்து ஸ்ரீதர் என்ற உதவி இயக்குனரையும் கார்த்தி கேரக்டருக்கு தேர்வு செய்துவிட்டாராம் இயக்குனர்.

இந்தநிலையில் சிம்புவின் பிறந்தநாளில் வெற்றிமாறன் கலந்துகொண்டபோது, வடசென்னை எந்தக் கட்டத்தில் இருகிறது என்று யதார்த்தாமாக விசாரித்த சிம்புவிடம், கார்த்தி ஒரு எஸ். எம். எஸ் மூலம் விலகியதைச் சிம்புவிடம் சொல்லியிருக்கிறார்.

வெற்றிமாறனை ஆறுதல் படுத்திய சிம்பு 2011-ல் கண்டிப்பாக நான் நடித்துக்கொடுக்கிறேன். அதற்கு முன்பு வேறொரு படம் பண்ணி விடுங்கள் என்று வாக்கு கொடுத்திருக்கிறாராம்.

சிம்பு தந்த தெம்பில் புதுமுகங்களை வைத்து ஆறுமாதத்தில் ஒரு படம் கொடுக்க தயாராகிவிட்டார் வெற்றிமாறன்.

Comments

Most Recent