பாரதிராஜா இயக்கத்தில் சேரன்,அமீர்,சீமான் இணையும் - 'அப்பன் ஆத்தா'

http://ww1.4tamilmedia.com/images/stories/cinema/bharathiraja-seeman-cheran-ameer.jpg
இயக்குனர் இமயம் பாரதிராஜா 'அப்பன் ஆத்தா' எனும் புதிய திரைபடத்தினை இயக்குகிறார். இதில் 3 சகோதரர்களாக அமீர்,சேரன்,சீமான் நடிக்கின்றனர். மீண்டும் கிராமப்புறத்தினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இக்கதைக்களத்தில் மூவருக்கும் ஒருவருக்கொருவர் இணையான, சமமான கதாபாத்திரத்திரமாம்! விரைவில், படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
பாரதிராஜா இயக்கத்தில் இறுதியாக தமிழில் ஹிட் கொடுத்த திரைப்படம் அர்ஜுன் நடித்த 'பொம்மலாட்டம்'. இறுதியாக அவர் நடித்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தருடன் இணைந்து,'ரெட்டைச்சுழி' படத்தில் நடித்திருந்தார்.

Comments

Most Recent