சென்னை : வாசன் விஷுவல்ஸ் வெஞ்சர் நிறுவனம் தயாரிக்கும் படம், ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் சந்தான...
சென்னை : வாசன் விஷுவல்ஸ் வெஞ்சர் நிறுவனம் தயாரிக்கும் படம், ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் சந்தானம் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் ‘சிவா மனசுல சக்தி’ ராஜேஷ் கூறியதாவது: இது காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள படம். ஆனால், காமெடி படம் மட்டுமல்ல. கமர்சியல் விஷயங்கள் அதிகமாக இருக்கும். ஆர்யாவும், நயன்தாராவும் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். சந்தானத்துக்கு முக்கியமான கேரக்டர். ஹீரோவின் நண்பர் கேரக்டரில் நடிக்கும் அவர், படம் முழுவதும் வருவார்.
கும்பகோணத்தில் பெரும்பகுதி காட்சியை படமாக்கியுள்ளோம். மினி பஸ்சில் நயன்தாராவும் ஆர்யாவும் செல்வது போலான காட்சியை ஷுட் பண்ணும்போது, அங்கு கூட்டம் கூடிவிட்டது. இதனால் ஷூட்டிங் தடைபட்டது. ஆசிரிய பயிற்சிப் பள்ளியில் படிப்பவராக நயன்தாரா நடித்துள்ளார்.
வழக்கமாக படங்களில் ஹீரோயின்களை, அமைதியானவர்களாகவே காண்பிப்பார்கள். இதில் நயன்தாரா அப்படி வரமாட்டார். அவரது கேரக்டர் பேசப்படும் விதமாக இருக்கும். கெஸ்ட் ரோலில் ஜீவா நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. யுவன் சங்கர் ராஜா இசையில் நா.முத்துக்குமார் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். விரைவில் பாடல் வெளியீடு இருக்கும். இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
Comments
Post a Comment