Chennai Box Office - Top 5 movies : Paiya in first place

 http://www.derok.net/images/grill/top%205.jpg
லிங்குசாமியின் பையா சென்னை பாக்ஸ் ஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இருக்கும் மெகா ஓபனிங் இந்தப் படத்துக்கு கிடைத்திருப்பது ஆச்ச‌ரியம்.

சென்ற வார சென்னை பாக்ஸ் ஃபிஸில் 4வது இடத்தை‌ப் பிடித்துள்ளது கச்சே‌ரி ஆரம்பம். சரக்கு இல்லாத இந்த கச்சே‌ரி சென்ற வார இறுதியில் 2.9 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இரண்டு வாரங்களில் இதன் மொத்த சென்னை வசூல் 69 லட்சங்கள்.

3வது இடத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த வருடத்தின் முதல் ஹிட். சென்ற வார இறுதியில் இதன் வசூல் 10.6 லட்சங்கள். ஐந்து வார முடிவில் மொத்த சென்னை வசூல் 5.13 கோடிகள். இந்த வருடத்தில் ஐந்து கோடியை தாண்டிய முதல் படம் இது.

2வது இடத்தில் வசந்தபாலனின் அங்காடித்தெரு. பத்தி‌ரிகைகளின் பாஸிடிவ்வான விமர்சனம் ரசிகர்களை திரையரங்கை நோக்கி இழுக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 12.46 லட்சங்கள். இரண்டு வாரங்கள் முடிவில் மொத்த வசூல், 64 லட்சங்கள். நல்ல படத்துக்கு இது குறைவுதான்.

முதலிடத்தில் பையா. படத்தின் பாடல்கள் ஹிட்டானது தயா‌ரிப்பாள‌ரின் அதிர்ஷ்டம். பையா வெளியான முதல் மூன்று தினங்களில் ஏறக்குறைய 71 லட்சங்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Comments

Most Recent