Court issues warrant against Rambha`s mother

http://www.topnews.in/files/Rambha-1.JPG

ஐந்து லட்சம் ரூபாய் செக் மோசடி வழக்கில் நடிகை ரம்பாவின் தாயாரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை போலீசாருக்கு மதுரை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரையை‌ சேர்ந்த கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மேலாளர் சங்கரன், மதுரை 4வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், பிரபல திரைப்பட நடிகை ரம்பாவின் தாயாரான உஷாராணி, தனது இளைய மகன் வாசுவை திரைப்படங்களை வினியோகம் செய்யும் துறையில் ஈடுபடுத்த விரும்பினார். இதற்கு முதலீடு செய்ய பணம் தேவைப்பட்டதால் என்னிடம் கடந்த 10.10.2004 அன்று ரூ.5 லட்சம் கடன் கேட்டார். சினிமா துறையில் வரும் வருமானத்தில் இருந்து அந்த பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறியதால் நானும் பணத்தை கொடுத்தேன். இதற்காக சென்னையில் உள்ள அவரது வங்கி கணக்கில் இருந்து 17.2.2005 தேதியிட்ட ரூ.5 லட்சத்துக்கான செக்கினை கொடுத்தார். அந்த தேதியில் மதுரையில் உள்ள இந்தியன் வங்கியில் எனது கணக்கில் அந்த செக்கினை செலுத்தினேன். ஆனால் அவரது வங்கி கணக்கு அந்த தேதிக்கு முன்பாக முடிக்கப்பட்டு விட்டது என்று கூறி நான் செலுத்திய செக் திரும்பி வந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டு உஷாராணிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் உரிய முறையில் அவர் பதில் அளிக்கவில்லை. எனவே அவர் மீது மாற்று ஆவண முறை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுத்து, நான் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன், என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த சில விசாரணைகளுக்கு உஷாராணி நேரில் ஆஜராகவில்லை. இதனால் அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கும்படி மனுதாரரின் வக்கீல் ஆர்.முருகன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்று ரம்பாவின் அம்மா உஷாராணிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து மதுரை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மே மாதம் 28ம்தேதிக்கு வழக்கை தள்ளி வைத்த மாஜிஸ்திரேட், அப்போது ரம்பாவின் தாயாரை கைது செய்து ஆஜர் படுத்த வேண்டும் என்று சென்னை விருகம்பாக்கம் போலீசாருக்கு உத்தரரவிட்டார்.

நடிகை ரம்பாவுக்கும், கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரகுமாருக்கும் திருப்பதியில் நாளை (8ம்தேதி) திருமணம் நடை‌பெறவுள்ள நிலையில் ரம்பாவின் தாயாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent