'Ek duje ke liya' for a Remake


ஸ்ருதி
கமல்,​​ ரதி நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற "ஏக் துஜே கேலியே' படத்தை ரீமேக் செய்ய பாலிவுட் பரபரக்கிறது.​ ரதி மகன் தனுஜ் நாயகன்,​​ நாயகிக்கு கமல் மகள் ஸ்ருதி​ என முதற்கட்ட வேலைகள் ஆரம்பிக்க முக்கிய வேடத்தில் கமலையும், ரதியையும் நடிக்க வைக்கும் யோசனையும் ​இருக்கிறதாம்.

சத்யஜித்ரேவின் பிரபல புத்தகத்தில் உள்ள திரில்லர் பகுதிகளை அனிமேஷன் படமாக எடுத்து முடித்திருக்கிறது டி.க்யூ.​ எண்டர்டெயின்மெண்ட்.​ 60 நிமிடங்கள் கொண்ட இந்த படத்தை டிஷ்னி டி.வி.​ குழுமம் வாங்கிய நிலையில்,​​ விரைவில் ஒளிபரப்பவும் இருக்கிறது.​ உலகப் புகழ் பெற்ற இயக்குநர் ஒருவரின் புத்தகம் அனிமேஷன் படமாக வருவது இதுவே முதன் முறையாம்.

www.directorshankaronline.com என்ற பெயரில் ஷங்கரும்,​​ www.directorbala.in என்ற பெயரில் பாலாவும் இணையங்களை ஆரம்பித்து விட்டனர்.​ மீடியாக்களிடம் அதிகம் பேசாத இவர்கள் தங்கள் படைப்புகள் பற்றியும் தற்போது உருவாக்கத்தில் உள்ள "எந்திரன்' மற்றும் "அவன் இவன்' பற்றியும் உலக ரசிகர்களுடன் இனி பேசுவார்கள்.

"காஸ்ட்லி மாப்பிள்ளை' தொடங்கி "தீர்க்க சுமங்கலி,' "திருப்பாவை' வரை பிரபல சீரியல்களை தயாரித்த அபிநயா கிரியேஷன்ஸ் சீரியல் பயணத்தில் 15}வது ஆண்டை தொட்டு விட்டது.​ "திருப்பாவை'க்கு பின் "அனுபல்லவி' என்ற புதிய சீரியலை தயாரித்து களம் இறக்கவுள்ளது.​ இந்த முறையும் சன் டி.வி.யே இதை ஒளிபரப்புகிறது.

பிரபலமானவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களை நினைவு கூறும் ஜெயா டி.வி.யின் "திரும்பி பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் ஏவி.எம்.​ சரவணன் பங்கேற்கிறார்.​

ஸ்டுடியோ உருவான வரலாறு தொடங்கி தயாரித்த படங்கள்,​​ எம்.ஜி.ஆர்,​​ சிவாஜி,​​ பீம்சிங்,​​ எஸ்.பி.முத்துராமன்,​​ ரஜினி,​​ கமல் வரை அனைவரோடும் நடந்த சுவையான சம்பவங்களை வரும் வாரம் முதல் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார்.

ஆங்கிலப் படங்களில் தமிழ் நடிகர்,​​ நடிகைகளை நடிக்க வைப்பது அதிகரித்து வருகிறது.​ "மாயா' என்ற படத்தில் நமீதா நடித்தார்.​ பைனான்ஸ் பிரச்னையால் இப்படம் முடிந்தும் திரைக்கு வராமல் உள்ளது.​

இப்போது அஜ்மல் ஆங்கிலப் படத்தில் நடிக்கிறார்.​ இவரைப் போல் விமலா ராமன்,​​ சிந்துமேனன் ஆகியோர் தனித்தனியே ஆங்கிலப் படங்களில் நடித்து வருகிறார்கள்.​

வெளிநாடுகளில் வாழும் தமிழ் ரசிகர்களை கவரவே இந்த பாணி கடைப்பிடிக்கப்படுகிறதாம்.​ பல்வேறு நாட்டு பட விழாக்களில் திரையிடவும் இந்த பாணி துணை புரிகிறதாம்.
.

Comments

Most Recent