Jai may don Kamal’s role in Sigappu Rojakkal remake

http://thatstamil.oneindia.in/img/2010/04/02-sigappu-rojakkal200.jpg
பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இப்போது இயக்குநராகியுள்ளார். தனது தந்தைக்குப் பெரும் வெற்றி தேடித் தந்த சிகப்பு ரோஜாக்கள் படத்தின் ரீமேக்கை முதல் படமாக இயக்கவுள்ளார்.

மனோஜ் கே. பாரதி என்ற பெயரில் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் மனோஜ், சிகப்பு ரோஜாக்களின் ரீமேக்கில் படு தீவிரமாக உள்ளார். திரைக்கதையமைப்பை முடித்து விட்ட அவர் அடுத்து நடிகர், நடிகையரை இறுதி செய்து வருகிறார்.

கமல்ஹாசன் நடித்த பாத்திரத்திற்கு சிலரை யோசித்து வைத்திருந்தார். ஆனால் யாரும் சரிப்பட்டு வரவில்லையாம். கடைசியில் வினய்யை முடிவு செய்துள்ளா. ஆனால் பாரதிராஜா வேண்டாம் என்று கூறி விட்டாராம்.

பின்னர் பாரதிராஜாவே நடிகர் ஜெய்யின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து ஜெய்யை அணுகியுள்ளாராம் மனோஜ்.

ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடிக்க கேரக்டர்களுக்கும் ஆட்களைத் தேடி வருகிறார் மனோஜ் என்கிறார்கள்.

விரைவில் அனைத்தும் முடிந்து சுபயோக சுபதினத்தில் படத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளாராம் மனோஜ்.

Comments

Most Recent