கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் மதராஸ்பட்டிணம் படத்தின் ஆடியோவை கமல் ஹாஸன் இன்று வெளியிடுகிறார். 1930 -40களில் சென்னையில் நடக்கும் சில நி...
கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் மதராஸ்பட்டிணம் படத்தின் ஆடியோவை கமல் ஹாஸன் இன்று வெளியிடுகிறார்.
1930 -40களில் சென்னையில் நடக்கும் சில நிகழ்வுகளின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. கிரீடம், பொய்சொல்லப் போறோம் ஆகிய படங்களைத் தந்த விஜய் இந்தப் படத்தை இயக்குகிறார்.
ஆர்யா, பியா, அமி ஜாக்ஸன், நாஸர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கென பிரத்தியேகமான அழைப்பிதழை அடித்துள்ளனர். இதில் பழைய சென்னையின் முக்கியமான இடங்களின் படங்கள் அடங்கிய அட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.
கறுப்பு வெள்ளையில், அந்நாளைய மவுண்ட் ரோடு, சென்ட்ரல், மயிலாப்பூர் கோயில், அன்றைய நாணயமான காலணா, பழைய மெட்ராஸ் மேப் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.
அந்நாளில் புகழ்பெற்ற எல்பின்ஸ்டோன் திரையரங்கில் பயன்படுத்தப்பட்டது போன்ற டிக்கெட் வடிவில் விழாவுக்கான அனுமதிச் சீட்டை அடித்து வழங்கியுள்ளனர்.
சரித்திரப் படம் என்பதால் பணத்தை எக்கச்சக்கமாய் செலவழித்து எடுத்துள்ளாராம் கல்பாத்தி அகோரம்.
ஆடியோ வெளியீட்டின்போது, படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் மேடையிலேயே பாடி, ஆடக் காட்டப் போகிறார்களாம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஹீரோ ஆர்யா உள்ளிட்டோர்.
இந்தப் படத்தின் டிசைன்கள், வித்தியாசமான காட்சிகளைப் பார்த்த உடனே விழாவுக்கு வர ஒப்புக் கொண்டாராம் கமல்.
Comments
Post a Comment