கோடம்பாக்கம் கோடங்கி நல்ல காலம் பொறக¢குது... நல்ல காலம் பொறக்குது... இந்தி ÔகஜினிÕ ரிலீசுக்கு முன், மீடியாகிட்ட பேச பிசின் நடிகைக்கு ...
கோடம்பாக்கம் கோடங்கி
நல்ல காலம் பொறக¢குது... நல்ல காலம் பொறக்குது...
இந்தி ÔகஜினிÕ ரிலீசுக்கு முன், மீடியாகிட்ட பேச பிசின் நடிகைக்கு கான் நடிகரு தடை விதிச்சாரு. அதே மாதிரி இந்தி அக்ஷய் ஹீரோ, மூணுஷாவுக்கும் தடை விதிச்சிருக்காராம்... விதிச்சிருக்காராம்... Ôபடத்தோட ரிலீசுக்கு முன்னாடி மீடியாகிட்ட பேசக்கூடாது, இந்தி சினிமா விழா, பார்ட்டிகள்ல கலந்துக¢கக் கூடாதுÕன்னு உத்தரவு போட்டிருக்காராம்... நடிகைக்கு உத்தரவு போட்டிருக்காராம்...
கண்ணான இயக்குனரு, ஈ நடிகரை வச்சு படம் எடுக்கப் போறாரு. ஆனா நடிகரோ இன்னும் கால்ஷீட் தரலயாம¢... தரலயாம்... கேட்டா, Ôமூணு படங்கள்ல ஒரே நேரத்துல நடிச்சிட்டிருக்கேன். வெயிட் பண்ணுங்கன்Õனு சொல்றாராம். நடிகரோட கால்ஷீட்டுக்காக ஷூட்டிங் தொடங்காம காத்திருக்காராம்... இயக்குனரு காத்திருக்காராம்...
சண்டை கிங்கோட பொண்ணுக்கு தமிழ், தெலுங்குல ஹீரோயின் வாய்ப்பு வருதாம். ஆனா மகளை பாலிவுட்லதான் அறிமுகப்படுத்தணும்னு நடிகர் முடிவு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்... அதுக்காக நடிப்பு ஸ்கூல்ல அவரை சேர்த்திருக்காராம். கூடவே சினிமா சம்பந்தமான டெக்னிக்கல் விஷயங்களையும் கத்துக்க அட்வைஸ் பண்ணியிருக்காராம். Ôநடிப்பு கைகொடுக்கலேன்னா டெக்னிக்கல் பக்கம் போயிடுÕன்னு மகளுக்கு சொல்லியிருக்காராம்... நடிகரு சொல்லியிருக்காராம்...

Comments
Post a Comment