நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... பச்சான் இயக்குனரோட பட ஷூட்டிங்கை தொடர, தயாரிப்பு கிரீன் சிக்னல் தரலயாம். அதனால இயக்குன...

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
பச்சான் இயக்குனரோட பட ஷூட்டிங்கை தொடர, தயாரிப்பு கிரீன் சிக்னல் தரலயாம். அதனால இயக்குனரு கவலையில இருக்காராம்... இருக்காராம்... இந்த இடைவெளியில தானே ஹீரோவா நடிச்சு, படம் இயக்கவும் முயற்சி பண்றாராம்... இயக்குனரு முயற்சி பண்றாராம்...
ஷாஜகான் மனைவி பெயர் நடிகை, தோழிகள் மேல கோபத்துல இருக்கிறாராம். Ôஒவ்வொரு நடிகையா கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகுறாங்க. நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோÕன்னு தோழி நடிகைகள் அட்வைஸ் பண்ணினாங்களாம்... பண்ணினாங்களாம்... Ôஉங்க வேலைய மட்டும் நீங்க பாருங்க. என் சொந்த விஷயத்துல தலையிட வேணாம்Õனு நடிகை சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...
பானுவான நடிகை ஹீரோயினா தமிழ்ல நடிச்சாரு. இப்போ படங்களே இல்ல. அதனால திரும்ப மலையாளத்துக்கே போனாரு. அங்கேயும் இப்போ தங்கச்சி ரோலா வருதாம்... வருதாம்... வேற வழியில¢லாததால, ஹீரோயினு இப்போ தங்கச்சியா மாறிட்டாராம்... மாறிட்டாராம்...

Comments
Post a Comment