சிங்கம் படத்தை முடித்த கையோடு, ராம் கோபால் வர்மாவின் ரக்த சரித்ரா ஷூட்டிங்கிற்கு போய்விட்டார் சூர்யா.‘‘கடந்த 5 வருடங்களா ராமுவும், நானும்...
சிங்கம் படத்தை முடித்த கையோடு, ராம் கோபால்
வர்மாவின் ரக்த சரித்ரா ஷூட்டிங்கிற்கு போய்விட்டார் சூர்யா.‘‘கடந்த 5 வருடங்களா ராமுவும், நானும் இணைந்து பணியாற்றுவது பற்றி பேசி வந்தோம்.
அதற்கான நேரம் இப்போதுதான் வந்திருக்கு.
தாதா கதை. ஏ.ஆர்.முருகதாஸ் படம்,கே.வி.ஆனந்த் படம் என வரிசையா தமிழ் படங்கள் இருந்தாலும், இந்தப் படத்துக்கு 30 நாட்கள் கால்ஷீட் தந்தா போதும்னு ராம் கோபால் சொன்னார்.
அதை என்னால் அட் ஜஸ்ட் செய்து தர முடியும். மும்பையில் ஷூட்டிங் நடந்துக்கிட்டிருக்கு.
இந்தியில் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை’’ என்கிறார் சூர்யா.
Comments
Post a Comment