Entertainment
›
Cine News
›
Tamanna hikes her salary to Rs 1 Crore | ரூ. 1 கோடி சம்பளம் கேட்கும் தமன்னா!
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா சம்பளமாக ரூ.1 கோடி வேண்டும் என கேட்டு வருகிறார். பஞ்சாப் மாந...

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா சம்பளமாக ரூ.1 கோடி வேண்டும் என கேட்டு வருகிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தமன்னா தமிழ் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. தமன்னாவுடன் அந்த படத்தில் அறிமுகமான நடிகை இலியானா, தமிழில் இடம் பிடிக்க முடியாது என நினைத்து தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கி விட்டார். ஆனால் தமன்னா தமிழில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அடுத்தடுத்த பட வேட்டையில் இறங்கினார். கல்லூரி கல்லூரி படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. படத்தில் தகதகக்கும் தங்க மங்கை போல ஜொலித்த தமன்னா பக்கம், தமிழ் சினிமா இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பார்வை திரும்பியது.
இதையடுத்து அவர் நடித்த அயன் படமும் சூப்பர் டூப்பர் ஹிட். அதுவரை ரூ. 7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த தமன்னா, தனது சம்பளத்தை ரூ.40 லட்சமாக உயர்த்தினார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்ததால் சம்பளம் ரூ.50 முதல் 60 லட்சமாக உயர்ந்தது. சமீபத்தில் தமன்னா நடிப்பில் வெளியான பையா படம் வசூல் சாதனையுடன் திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் தனது சம்பளத்தை இரண்டு மடங்காக.. அதாவது ரூ.1 கோடியாக உயர்த்தியிருக்கிறாராம். அதேபோல முன்னணி நாயகர்களுடன் மட்டும்தான் ஜோடி போடுவது என்கிற முடிவுக்கும் வந்திருக்கிறாராம் தமன்னா. தமிழ்சினிமாக்காரர்கள் மத்தியிலும், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் தமன்னா ஜூரம் நீடிக்கும் வரை தமன்னா காட்டில் பண மழைதான். காற்றுள்ள போதுதானே தூற்றிக் கொள்ள முடியும் என்பதை தமன்னா நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் போலும்.

Comments
Post a Comment