Entertainment
›
Cine News
›
Using me only for Glamour - Nayanthara | கிளாமருக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் : நயன்தாரா கவலை
இந்தி சினிமாவுக்கு செல்லும் ஆசை இல்லை என்றார் நயன்தாரா. இது பற்றி அவர் கூறியதாவது: கிளாமர் வேடங்களில் அதிகம் நடித்துவிட்டேன். நடிப்பை வெ...
இந்தி சினிமாவுக்கு செல்லும் ஆசை இல்லை என்றார் நயன்தாரா. இது பற்றி அவர் கூறியதாவது: கிளாமர் வேடங்களில் அதிகம் நடித்துவிட்டேன். நடிப்பை வெளிப்படுத்தும் படத்துக்காக காத்திருந்தேன். அப்போதுதான் மலையாள படமான ‘எல்க்ட்ரா’வில் வாய்ப்பு வந்தது. பெரும்பாலான படங்களில் நடிக்கும்போது மரத்தை சுற்றி நடனம் ஆட மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. பட விளம்பரத்துக்கும் கிளாமருக்கும் மட்டுமே ஹீரோயின்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அத்தகைய படங்களிலும் ஹீரோயின்களுக்கு நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அப்படி வாய்ப்பு இல்லாத பட்சத்தில், நல்ல கேரக்டர் கொண்ட சிறு படங்களில் நடிக்கலாம்.
எந்த நடிகையுடனும் எனக்கு போட்டி இல்லை. அவரவருக்கு தகுந்த இடம் திரையுலகில் இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்போது கன்னட படத்திலும் நடிக்கிறேன். ‘இந்தி படங்களில் நடிப்பீர்களா?’ என கேட்கிறார்கள். தென்னிந்திய படங்களில் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கிறேன். இந்தியில் புதுமுக நடிகையாக பணியாற்ற விரும்பவில்லை. பிரபு தேவாவுடன் தொடர்பு பற்றி கேட்கிறார்கள். வதந்திகள் இப்போது என்னை பாதிப்பதில்லை. அதை பற்றி கவலைப்படுவதும் இல்லை. பிரபலமாக இருப்பதற்காக கொடுக்கும் விலைதான் இது. இவ்வாறு நயன்தாரா கூறினார்.

Comments
Post a Comment