மணிரத்னம் தமிழ், இந்தியில் இயக்கும் படம் ‘ராவணன்’. இதில் விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், பிருத்விராஜ், பிரியாமணி நடிக்கின்றனர். ...
மணிரத்னம் தமிழ், இந்தியில் இயக்கும் படம் ‘ராவணன்’. இதில் விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், பிருத்விராஜ், பிரியாமணி நடிக்கின்றனர். இப்படத்துக்காக சமீபத்தில் சண்டைக்காட்சி ஒன்று மும்பை அருகே படமாக்கப்பட்டது. ஷாம் கவுசிக் சண்டைக் காட்சியை இயக்கினார். விக்ரம், ஐஸ்வர்யா ராய் இருவரும் நிற்பது போலவும், வில்லனால் வீசப்படும் குண்டு அந்தரத்தில் வெடித்து சிதறுவது போலவும் காட்சி அமைய வேண்டும். ஆனால், அப்படி வீசப்பட்ட குண்டு அந்தரத்தில் வெடிக்காமல், எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து வெடித்தது. இதையடுத்து விக்ரமும் ஐஸ்வர்யா ராயும் விலகி ஓடினர். இதனால் அவர்கள் காயமின்றி தப்பியதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஸ்டண்ட் இயக்குனர் ஷாம் கவுசிக் கூறும்போது, ‘’இது மிகவும் ரிஸ்கான சண்டைக் காட்சிதான். 25 அடி தூரத்தில் இருந்து பாமை எறிய வேண்டும். விக்ரம், ஐஸ்வர்யா நிற்கும் இடத்திற்கு 15 அடிக்கு முன்னே அது வெடி க்க வேண்டும். இதுதான் திட்டம். ஆனால், எதிர்பாராத விதமாக இப்படி நடந்துவிட்டது” என்றார்.
Comments
Post a Comment