தெலுங்கில் சிறிய இடைவெளிக்கு பிறகு “டான் சீனு” என்ற படத்தில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் “போக்கிரி ராஜா” என்ற படத்தில் மம்முட்டி, பிரு...
வெவ்வேறு மொழி படங்களில் நடிப்பது எனக்கு பிரச்சினையாக தெரியவில்லை. மொழிகள் மாறினாலும் உணர்வுகள் ஒன்றுதான். அந்தந்த மாநில பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவாறு என்னை மாற்றிக் கொள்வேன்.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நான் எப்படி இருப்பேன் என்றெல்லாம் சிந்திப்பது இல்லை. ஐந்து நிமிடம் கிடைத்தாலும் அதை ஆக்கப்பூர்வமாக செலவிட விரும்புகிறேன். இருபது ஆண்டுகளுக்கு பிறகு கடற்கரை பீச்சில் போய் உலவி விட்டு திரும்பி பார்க்கும் போது ஒரு நடிகையாக சாதித்து விட்டேன் என்ற திருப்தி ஏற்படவேண்டும்.
திருமணம் எப்போது என்று எல்லோரும் கேட்கிறார்கள். இப்போதைக்கு திருமணம் இல்லை. கல்யாணம் என்பது வாழ்க்கையின் முக்கியகட்டம். அதை நான் தவற விடமாட்டேன். என் திருமணம் ரகசியமாக நடக்காது. நண்பர்கள் உறவினர்கள் எல்லோரையும் அழைத்து அவர்கள் வாழ்த்துக்களோடு திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

Comments
Post a Comment