பிரபுதேவாவுடன் திருமணமா? “காலம் பதில் சொல்லும்” நயன்தாரா

Nayanthara
பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். ஒளிவுமறைவாக சந்தித்த இருவரும் பொதுநிகழ்ச்சிகளுக்கு இப்போது சேர்ந்தே வருகிறார்கள். ஐதராபாத்தில் நடந்த பட விழாவுக்கு கைகோர்த்து வந்தனர். அருகருகே உட்கார்ந்து நிகழ்ச்சிகளை ரசித்தார்கள்.

சென்னையில் திரையுலகினர் முதல்-அமைச்சருக்கு நடத்திய பாராட்டு விழாவில் சேர்ந்து நடனம் ஆடி பரபரப்பு ஏற்படுத்தினர்.

இருவரையும் பற்றி கிசுகிசுக்கள் வரும் நிலையிலும் பிரபுதேவா மனைவி ரம்லத் என் கணவரை நயன்தாரா அபகரிக்க பார்க்கிறார். எங்கு பார்த்தாலும் அவரை அடிப்பேன் என்று சொன்ன நிலையிலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றனர். இருவரும் ஏதோ துணிச்சலான முடிவை எடுத்து விட்டனர் என்பதையே இது பிரதிபலித்தது. இருவரும் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்திகள் பரவியுள்ளன.

நயன்தாரா கையில் பிரபுதேவா பெயரை பச்சை குத்தியுள்ளார். “பி” என்ற ஆங்கில எழுத்தையும் ரபு என்ற தமிழ் எழுத்துக்களையும் கையில் பச்சை குத்தியுள்ளார். இது பிரபுதேவாவை தானே குறிக்கும். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளீர்களா? என்று நயன்தாராவிடம் கேட்டபோது, அதுபற்றி வரும் காலங்களில் தெரிந்து கொள்ளலாம். காலம் பதில் சொல்லும் என்றார். இன்னும் பத்து வருடங்கள் கழித்து நிஜ வாழ்க்கையில் ஒரு அம்மாவாக இருக்க ஆசைப்படுகிறேன். தன்னைப் பற்றி நிறைய கற்பனையான செய்திகள் வருகின்றன என்றும் கூறினார்.

மேலும் அவர் தான் நடித்து வரும் படங்கள் பற்றி கூறியதாவது:-

நான் கிளாமராக நடித்த நிறைய படங்கள் ஹிட்டாகி உள்ளன. ஆனால் அவற்றில் இருந்து வேறுபட்டு குடும்பபாங்கான வேடத்தில் “எலக்ட்ரா” என்ற மலையாள படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் நடித்து சமீபத்தில் ரிலீசான சிம்ஹா படம் வெற்றிகரமாக ஓடுகிறது. தமிழில் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்து வருகிறேன்.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடிப்பது வித்தியாசமாக தெரியவில்லை. என் தந்தை விமான படையில் இருந்ததால் இந்தியாவில் பல பகுதிகளில் பயணமாகி வசித்துள்ளோம். எனவே எல்லா பட உலகமும் என் வீடு போலவே உள்ளன.

எதிர்காலத்தில் நல்ல கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டு போவதெல்லாம் பிடிக்காது. திறமையான நடிகை என பெயர் எடுக்கவேண்டும் என்றார்

Comments

Most Recent