என்னையும் நயனையும் பிரிக்க முடியாது! - பஞ்சாயத்தில் பிரபுதேவா விளக்கம

prabhudeva-nayantara
சென்னை: நானும் நயன்தாராவும் பிரிக்க முடியாத அளவுக்கு நெருக்கமாகிவிட்டோம். இனி எங்களை பிரிக்க முயற்சிக்க வேண்டாம் என்று நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா பஞ்சாயத்தார் முன்னிலையில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் - மனைவியாக வசித்து வருகிறார்கள். மீடியா முன்பு இதை இருவருமே முன்பு மறைத்து வந்தார்கள். இப்போது வெளிப்படையாகவே சேர்ந்து வருகிறார்கள். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் கூட தம்பதிகளைப் போல இணைந்தே செல்கிறார்கள்.

பிரபுதேவா, ஏற்கெனவே ரம்லத் என்ற நடனக் கலைஞரை காதலித்து திருமணம் செய்தவர். 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.

நயன்தாரா-பிரபுதேவாவின் காதல் விவகாரம், மனைவி ரமலத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. நயன்தாராவிடம் இருந்து கணவரை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்று ரமலத் இன்னும் முயற்சி செய்து வருகிறார்.

அதன் முதல்கட்டமாக, "நயன்தாரா என் கணவரை விட்டு விலகிவிட வேண்டும். இல்லையென்றால், அவரை எங்கேயாவது நேரில் பார்த்தால் அடிப்பேன்'' என்று முன்பு எச்சரிக்கை விடுத்தார். இந்த எச்சரிக்கைக்கு எந்த பலனும் இல்லை. நயன்தாராவும், பிரபுதேவாவும் முன்பை விட, இப்போது அதிக நெருக்கமாகிவிட்டார்கள்.

இதைத்தொடர்ந்து ரமலத், தமிழ் பட உலகை சேர்ந்த சில பிரமுகர்களிடம் தனது நிலைமையை கூறி முறையிட்டார்.

"என்னிடம் இருந்தும், என் குழந்தைகளிடம் இருந்தும் என் கணவரை நயன்தாரா பிரித்து சென்று விடுவாரோ என்று பயப்படுகிறேன். நயன்தாராவின் பிடியில் இருந்து என் கணவரை மீட்டு, எங்களுடன் சேர்த்து வையுங்கள்'' என்று அழுதுகொண்டே கூறினார்.

இதனால் ரம்லத் மீது இரக்கப்பட்ட திரையுலகின் முக்கிய பிரமுகர்கள், பிரபுதேவாவை நேரில் வரவழைத்து, 'பஞ்சாயத்து' பேசினார்கள். அவர்களிடம் பிரபுதேவா, "நயன்தாராவை விட்டு என்னால் பிரிய முடியாது. அந்த அளவுக்கு நாங்கள் நெருக்கமாகி விட்டோம். நான் கைவிட்டால், நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார். எங்களை விட்டுவிடுங்கள்'' என்று கூறிவிட்டார்.

அதனால் பஞ்சாயத்து பேச வந்தவர்கள், இது தண்ணி தெளித்துவிட்ட கேஸ், நம்மால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று கூறி, நயன்தாரா-பிரபுதேவா பிரச்சினையை கைகழுவி விட்டார்கள்!

Comments

Most Recent