நான் விமர்சகர்களுக்கு பயப்படுவதில்லை : விஜய் அதிரடி

http://icdn1.indiaglitz.com/tamil/news/sura210410_1.jpg
சுறா படத்தின் வசூல் மற்றும் அப்படத்துக்கு மக்கள் தரும் வரவேற்பு எனக்கு பரம திருப்தியாக உள்ளது என்கிறார் விஜய்.

இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்து பேட்டியில், "சுறா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இது என்னுடைய 50வது படம் என்று எந்த வகையிலும் நான் சொல்லிக் கொண்டதில்லை. இத்தனை நாள் வந்தது போல இதுவும் ஒரு படம். அவ்வளவுதான்.

இந்தப் படம் பற்றி வெளியில் சிலர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது எனக்கும் தெரியும். சில வருடங்களுக்கு முன்பென்றால் இதைப் பற்றி கவலைப் பட்டிருப்பேன். ஆனால் இப்போது அந்த மனநிலையில் நான் இல்லை. அதைத் தாண்டி வந்துவிட்டேன்.

என்னைப் பற்றி, என் படம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் என்னையோ, படத்தையோ எந்த வகையிலும் பாதிப்பதில்லை. என் படம் விமர்சகர்களால் ஓடுவதில்லை. மக்கள்தான் ஓட வைக்கிறார்கள்.

இன்னொன்று விமர்சகர்களுக்கு படத்தை விமர்சிக்க உரிமை உள்ளது. ஆனால் முதல் பத்து நாள் வசூலை பாதிக்கும் வகையில் அவர்கள் எழுதக் கூடாது. இந்தப் படத்தின் சிறப்பு, இதில் உள்ள செய்திதான். இதில் நான் மக்களுக்காகப் போராடுகிறேன்.

சுறாவைப் பொறுத்த வரை, எனக்கு திருப்தி... பரம திருப்தி. அந்த திருப்தியில் மனம் அமைதியாக இருக்கிறது.

என்னுடைய அடுத்த படத்தை சித்திக் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு காவல்காரன் என்ற பெயர் இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். இந்தப் படமும் என் ரசிகர்களுக்குப் பிடித்த படமாக அமையும்..." என்றார்.

Comments

Most Recent