Entertainment
›
Cine News
›
Help poor on my Birthday - Ajith | என் பிறந்தநாளில் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்
நடிகர் அஜீத்துக்கு மே 1-ந்தேதி பிறந்தநாள். இந்த பிறந்தநாள் விழாவை தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். சிலர் ...
நடிகர் அஜீத்துக்கு மே 1-ந்தேதி பிறந்தநாள். இந்த பிறந்தநாள் விழாவை தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். சிலர் ஆடம்பரமாக நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தனது பிறந்தநாள் விழாவை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றும், அன்றைய தினம் ஏழைகளுக்கு உதவிகள் வழங்குமாறும், ரசிகர்களுக்கு அஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
என்றும் என்னுடைய சாதனையிலும், சோதனையிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என் ரசிகர்களுக்கு வணக்கம் கலந்த நன்றி! நான் தற்போது “பார்முலா” ரேசில் கலந்து கொள்ள ஸ்பெயின் நாட்டிற்கு வந்துள்ளேன். இத்தருணத்தில் மே 1-ந்தேதி என் பிறந்தநாள் அன்று நான் சென்னையில் இருக்க வாய்ப்பு இல்லை.
எனவே என் மேல் உள்ள அபிமானத்தின் காரணமாக ரசிகர்கள் நேரில் வருவதையோ, ஆடம்பரமாகவும், விமரிசையாகவும் பிறந்தநாள் விழா கொண்டாடுவதையோ தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பொதுமக்களுக்கு இடைஞ்சலின்றி விளம்பரம் இல்லாமல் செய்யப்படும் நலத்திட்டங்களில் ஈடுபட்டு கண்ணியத்தை காத்து கட்டுப்பாடு மீறாமல் கொண்டாடப்பட்டால் அதுவே எனக்கு பிறந்தநாள் வாழ்த்தாகும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment