Jaishankar birthday programe in Vijay TV

 

இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் 1965ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜெய்சங்கர். 200க்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்திருக்கும் ஜெய்சங்கர் பெரும்பாலான படங்களில் துப்பாக்கியுடன் நடித்ததால் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என ரசிகர்கள் அழைத்தனர். இவர் பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததால் ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை நாயகர் என்ற பட்டமும் உண்டு. அந்தக்கால தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்த ‌‌‌ஜெய்சங்கர் 2000-ம் ஆண்டு ஜூன் 3ம்‌தேதி காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பாகத்தான் இருக்கிறது.

‌மறைந்த நட்சத்திரங்களுக்கு மரியாதை செய்யும் வகையில் பழைய திரைப்படங்கள், முன்னாள் நாயகர்கள் பற்றிய நிகழ்ச்சிகளை வெளியிட்டு ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வரும் விஜய் டி.வி., ஜெய்சங்கர் பிறந்த நாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. வருகிற ஜூலை 15ம்‌தேதி ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சஞ்சய் சங்கர் செய்து வருகிறார். நிகழ்ச்சியின்போது ஜெய்சங்கருடன் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஜெய்சங்கரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதத்தில் இருக்கும் என்கிறார் சஞ்சய் சங்கர்.

Comments

Most Recent