அசினின் இலங்கை பயண சர்ச்சை ஓயவே ஓயாது போல இருக்கிறது. இந்திப்பட சூட்டிங்கிற்காக இலங்கை சென்ற அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி...
அசினின் இலங்கை பயண சர்ச்சை ஓயவே ஓயாது போல இருக்கிறது. இந்திப்பட சூட்டிங்கிற்காக இலங்கை சென்ற அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரையுலகை சேர்ந்த சிலரும், நடவடிக்கை தேவையில்லை ; தேவைப்பட்டால் நாமும் இலங்கை சென்று அங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவி செய்வோம் என்று ஒரு சிலரும் பேட்டியளித்து வருகிறார்கள். அசினும் தன் பங்கிற்கு இலங்கையில் தமிழர்களுக்கு உதவி செய்ய அறக்கட்டளை துவங்கியிருக்கிறேன், நல உதவிகளை செய்வது தவறா? என்று தனது இலங்கை பயணத்தை நியாயப்படுத்தி வருகிறார்.
எத்தனை விளக்கம் கொடுத்தாலும் இந்த சர்ச்சை ஓயாத நிலையே உருவாகி வருகிறது. இலங்கைக்கு சென்று அதிபர் ராஜபக்சே மனைவியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அசினுக்கு எதிராக கோவையில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மே 17 இயக்கம் சார்பில் காந்திபுரம் 100 அடி ரோடு, சிவானந்தாகாலனி, ரத்தினபுரி உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும் அந்த போஸ்டர்களில், தமிழீழ மக்களுக்கு தொண்டு செய்வது போல் நடித்து ராஜபக்சேயுடன் இணைந்து தமிழீன படுகொலையை மறைக்க உதவும் நடிகை அசினை கண்டிக்கிறோம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment