சென்னை: விஷன் எக்ஸ் மீடியா சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம், 'நந்தி'. அகில் ஹீரோ, சனுஷா ஹீரோயின். இசை, பரத்வாஜ். தமிழ்வ...
சென்னை: விஷன் எக்ஸ் மீடியா சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம், 'நந்தி'. அகில் ஹீரோ, சனுஷா ஹீரோயின். இசை, பரத்வாஜ். தமிழ்வாணன் இயக்குகிறார்.படம் பற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது:'கள்வனின் காதலி', 'மச்சக்காரன்' படங்களை தொடர்ந்து இதை இயக்குகிறேன். நந்தியை கும்பிட்ட பிறகே சிவபெருமானை வணங்க வேண்டும் என்பார்கள். தன்னை நந்தி போல் நினைப்பவனுக்கும், அவனை வணங்காமல் இருக்கும் ஒருவனுக்குமான பிரச்னைகளே கதை. கிராமத்து வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்துள்ளேன்.
ராமநாதபுரம் கதைக்களம் என்பதால், கலையனூர் மற்றும் புத்தேந்தல், தேவிப்பட்டினம், தேர்போகி கிராமங்களில் முழு படப்பிடிப்பும் நடந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் 3 ஆயிரம் மக்கள் பங்கேற்றனர். 3 கேமராக்களில் படமாக்கப்பட்ட இக்காட்சி, இதுவரை தமிழ் சினிமாவில் இடம்பெறாத கிளைமாக்ஸாக இருக்கும். 'கல்லூரி', 'வால்மீகி' படங்களில் பார்த்திராத அகிலை இதில் பார்க்கலாம்.
Comments
Post a Comment